Home இலங்கை சமூகம் மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானையொன்று உயிரிழப்பு

மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானையொன்று உயிரிழப்பு

0

புத்தளம் (Puttalam) – மகாகும்புக்கடவல பிரதேசத்தின் பெத்திகம கிராமத்தில் மின்சாரம்
தாக்கி காட்டுயானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வனஜீவித் திணைக்கள அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

மகாகும்புக்கடவல பிரதேசத்தின் பெத்திகம கிராமத்தில் ஒன்றரை ஏக்கரில் பயற்றைச்
செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை பாதுகாப்பதற்காக விவசாயி ஒருவர் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்று
பாதுகாப்பு வேலி அமைத்துள்ளார்.

பிரேதப் பரிசோதனை

இந்த விவசாயச் செய்கையை சாப்பிடுவதற்காக காட்டுயானைக் கூட்டம் ஒன்று நேற்று
இரவு அக்காணியினுள் புகுந்து பயற்சைச் செய்கையை சாப்பிட்டு நாசம் செய்து
விட்டு வெளியேற முற்பட்டவேளையில் காட்டுயானை ஒன்று மின்சார வேலியில் சிக்கி
உயிரிழந்துள்ளதாக வனஜீவித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்துள்ள காட்டுயானை சுமார் 6 அடியைக் கொண்டதும் 20 முதல் 25 வயது
மதிக்கதக்கது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்துள்ள யானையின் பிரேதப் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

அதேவேளை, இக்காணியின் உரிமையாளரை கைது செய்வதற்காக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளவும்
வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version