Home இலங்கை சமூகம் வெருகல் பிரதேசத்தில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்

வெருகல் பிரதேசத்தில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்

0

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள், நேற்று (05) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் இரண்டு வீடுகளை சேதப்படுத்தியுள்ளதோடு, பயன் தரும் தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளதோடு, வீட்டு
உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

பாதிப்புகளுக்கு, அரசாங்கம் இழப்பீடு

மேலும், வீட்டில் இருந்த அரிசி மூடைகளையும் யானைகள் இழுத்துச் சென்றுள்ளன
என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும்,
இதனால் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பதற்கு பலத்த போராட்டம் செய்ய வேண்டி
இருப்பதாகவும் கிராமவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, காட்டு யானையால் இந்த கிராம மக்களுக்கு இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, அரசாங்கம் இழப்பீடுகளை வழங்குவதோடு, யானை பாதுகாப்பு
வேலிகளையும் அமைத்துத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வெருகல் – உப்பூறல்
கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version