Home இலங்கை சமூகம் மூதூரில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்

மூதூரில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்

0

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நல்லூர் கிராமத்திற்குள் இன்று (13) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் வீடொன்றை
சேதப்படுத்தியுள்ளதோடு வீட்டில் காணப்பட்ட உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

இதன்போது பயன்தரு மரங்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.

பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு..

தமது கிராமத்தில் மின்சார இணைப்பு இல்லை என்பதோடு காட்டு யானைகளின்
அட்டகாசத்தால் வீட்டில் அச்சத்துடனே உறங்குவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில்,  தமக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு தராவிட்டாலும் யானை கிராமத்திற்குள் உள் நுழையாத
வகையில் யானை பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு மூதூர் – நல்லூர் கிராம மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version