Home இலங்கை சமூகம் செம்மணி விவகாரத்தில் தனது இராணுவத்தை கூண்டிலேற்றுமா இலங்கை அரசு

செம்மணி விவகாரத்தில் தனது இராணுவத்தை கூண்டிலேற்றுமா இலங்கை அரசு

0

யாழ்ப்பாணம் செம்மணிப்பகுதியில் சித்துபாத்தி மயான வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகள் ஒரு அதிர்வை ஏற்படுத்திய நிலையில் அந்த பகுதியில் இன்னுமொரு புதைகுழியும் காணப்படலாம் எனவும் இது ஒரு ஆபத்தான ஒருநிலைமையாக காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

கடந்த 1998 ம் ஆண்டு கிருசாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி வழங்கிய வாக்குமூலத்தின்படி
செம்மணி மற்றும் பகுதிகளில் உள்ள 10 மனிதப் புதைகுழி இடங்களை தான் அடையாளம் காட்டுவேன் என குறிப்பிட்டிருந்தார்.

எனினும் 10ல் இரண்டு இடங்களிலையே அகழ்வு மேற்கொள்ளப்பட்டதுடன் அவை அரசதரப்பால் தொடர்ந்தும் அகழப்படுவதற்கான முனைப்புகள்
வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை இது நிலுவையில் உள்ள ஒரு விடயம் என குறிப்பிட்டிருந்த்து

எனவேதான் இப்போது அகழப்படும் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச அவதானிப்பு தேவை என வலியுறுத்தப்படுகிறது.

 இந்த விவகாரத்தை அரச தரப்பு அணுகும் விதம் இங்கு மூடி மறைக்கப்பட காத்திருக்கும் சில அதிர்ச்சி தகவல்கள் என பல விடயங்களை ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு

NO COMMENTS

Exit mobile version