Home விளையாட்டு பாகிஸ்தானுடன் முரண்பாடு : மரபுகளை உடைக்கிறதா இந்தியா..!

பாகிஸ்தானுடன் முரண்பாடு : மரபுகளை உடைக்கிறதா இந்தியா..!

0

 அடுத்த மாதம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி(india cricket team) பயன்படுத்த திட்டமிட்டுள்ள சீருடையில், போட்டியை நடத்தும் பாகிஸ்தானின் (pakistan)பெயரைச் சேர்க்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) முடிவு செய்துள்ளதால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

 முன்னதாக, இந்தியா பாகிஸ்தானில் விளையாட விரும்பாததால், இந்தப் போட்டியில் இந்தியாவின் அனைத்துப் போட்டிகளும் பாகிஸ்தானில் நடத்தப்படுவதற்குப் பதிலாக துபாய்க்கு மாற்றப்பட வேண்டியிருந்தது.

சீருடையில் இடம்பெறவேண்டிய விடயம்

வழக்கமான பாரம்பரியத்தின்படி, போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் ஒவ்வொரு அணியின் சீருடையிலும் சேர்க்கப்பட வேண்டும் என்றாலும், நடந்து வரும் இந்திய-பாகிஸ்தான் முரண்பாடு காரணமாக, பாகிஸ்தான் பெயர் இல்லாமல் இந்தியா தனது சீருடையை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்திய அணி இன்னும் அதிகாரபூர்வமாக தனது சீருடையை வெளியிடவில்லை என்றாலும், வெளிநாட்டு ஊடகங்கள் பாகிஸ்தானின் பெயர் இடம்பெறாத அதிகாரபூர்வ இந்திய சீருடை என்று கூறப்படும் ஒரு சீருடையை வெளியிட்டுள்ளன.

போட்டியின் வரலாற்றைக் கருத்தில் கொண்டால், இதுபோன்ற ஒரு சம்பவத்தை இந்தப் போட்டியில் மட்டுமே காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் விளக்கம்

இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, போட்டியை நடத்தும் நாட்டின் பெயரைச் சேர்ப்பது ஒரு பாரம்பரியம் மட்டுமே என்றும், இந்திய அணி துபாயில் விளையாடுவதால் பாகிஸ்தானின் பெயரை சீருடையில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியதாகக் கூறப்படுகிறது. 

இந்தக் காரணத்திற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அதிகாரிகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையை (பி.சி.சி.ஐ) கடுமையாக விமர்சித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version