Home இலங்கை சமூகம் வில்பத்து பள்ளக்கண்டல் தேவாலய விடயம் : முடிவெடுக்கவுள்ள சட்டமா அதிபர்

வில்பத்து பள்ளக்கண்டல் தேவாலய விடயம் : முடிவெடுக்கவுள்ள சட்டமா அதிபர்

0

வில்பத்து தேசிய பூங்காவுக்குள் அமைந்துள்ள பள்ளக்கண்டல் தேவாலயத்தில்
ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை ஆராதனை நடத்தக்கோரும் திருச்சபையின்
கோரிக்கை குறித்து சட்டமா அதிபர் முடிவெடுக்கவுள்ளார்.

இந்த மாதாந்த ஆராதனை பாரம்பரியமாக இடம்பெற்றதா என்பதை இலங்கை கத்தோலிக்கத்திருச்சபை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இது தொடர்பான தகவலை சுற்றாடல் அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு கோரப்பட்ட
போதிலும், தேவாலயம் அதனை வழங்காததால், குறித்த விடயம் சட்டமா அதிபரிடம்
பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கட்டுமானங்கள் தொடர்பாக சட்டம் நடைமுறை

தேவாலயம் பூங்காவுக்குள் அமைந்திருப்பதால், பக்தர்கள் அல்லது நிர்வாகத்தினர்
வனவிலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாக்கும் சட்ட விதிகளை மீறும்
பட்சத்திலேயே அதிகாரிகள் தலையிடுவதாகவும், அத்துமீறிய கட்டுமானங்கள்
தொடர்பாகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வனவிலங்குப்
பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தேவாலயத்தின் மத நடவடிக்கைகளில் அதிகாரிகள் தலையிடுவதில்லை
என்றும் அமைச்சர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version