Home இலங்கை சமூகம் போதைப்பொருள் கடத்தலின் மூலம் ஈட்டிய வருமானம் தொடர்பில் இளம் பெண் கைது

போதைப்பொருள் கடத்தலின் மூலம் ஈட்டிய வருமானம் தொடர்பில் இளம் பெண் கைது

0

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருமானத்தை பெற்றமை தொடர்பில் இளம் பெண்
ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி பரிவர்த்தனை

வெளிநாட்டில் வசிக்கும் இரண்டு பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன்
தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளை நிர்வகித்ததாகக் கூறப்படும் கொழும்பு 13ஐச்
சேர்ந்த 28 வயது பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கடத்தல்காரர்களின் சார்பாக பணப் பரிமாற்றங்களை எளிதாக்குவதற்காக
சந்தேகநபர், உள்ளூர் தனியார் வங்கிகளில் இரண்டு வங்கிக் கணக்குகளைத்
திறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை

இந்த நிலையில் குறித்த சட்டவிரோத பணப்புழக்கம், குறித்த விசாரணைகள் தொடர்ந்து
நடைபெற்று வருகின்றன.

NO COMMENTS

Exit mobile version