Home முக்கியச் செய்திகள் யாழில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம் : மாநகரசபையின் நடவடிக்கை

யாழில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம் : மாநகரசபையின் நடவடிக்கை

0

யாழில் கொட்டப்படும் உணவுக் கழிவுகளால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பிரதான அங்காடி கடைகள் அமைந்த இடமான கந்தப்பசேகர வீதி, பழைய கரன்
தியேட்டர் அருகாமையில் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம்
வீசுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மாநகரசபை உறுப்பினர்கள் விஜயம்

இந்த நிலையில் மாநகரசபை உறுப்பினர்களான பிரதி மேயர் தயாளன், சாருஜன் மற்றும்
சதீஸ் ஆகியோர் குறித்த இடத்திற்கு நேரில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாநகரசபை அறிவித்துள்ளது.

அதன்படி, கழிவுகள் அகற்றப்பட்டு, காணி
உரிமையாளர்கள் இல்லதாவிடத்து மாநகரசபையால் சுற்றிவர வேலி அமைத்து, கண்காணிப்பு
கமரா மூலமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகரசபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version