Home இலங்கை குற்றம் கொழும்பில் தங்க நகை மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடிய பெண்

கொழும்பில் தங்க நகை மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடிய பெண்

0

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு சொந்தமான தங்க நகை மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பகுதியை சேர்ந்த ஜெயசீலி என்ற பெண், தனது தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை காணவில்லை என மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு பணம் மற்றும் இலங்கை பணம் ஆகியவை காணாமல் போனதாக அவர் முறைப்பாட்டில் கூறியிருந்தார்.


தங்க நகை

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை தொடங்கிய மட்டக்குளி பொலிஸார் சுமார் 34 வயதுடைய சுவாதி நீலன் என்ற பெண்ணை சந்தேக நபராக அடையாளம் கண்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதற்கமைய களவாடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version