Home முக்கியச் செய்திகள் சிறையிலுள்ள கணவனுக்கு உணவு வழங்க சென்ற மனைவி கைது

சிறையிலுள்ள கணவனுக்கு உணவு வழங்க சென்ற மனைவி கைது

0

அநுராதபுரம்(Anuradhapura) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவனுக்கு சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கலந்த உணவை கொண்டு சென்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம், சுச்சாரித்தாகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவரே சிறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்ப்பதற்காக பெண்ணொருவர் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், குறித்த பெண் கொண்டு சென்ற உணவுப் பொதியில் இருந்த தேங்காய் சம்பலில் போதைப்பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேக நபரான பெண்ணை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/woman-arrested-smuggle-drug-her-remanded-husband-1728128362?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version