Home இலங்கை சமூகம் வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் பெண்ணொருவர் கைது

வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் பெண்ணொருவர் கைது

0

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் துப்பாக்கி என்பவற்றுடன் பெண்ணொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை, கஹத்தேவல பிரதேசத்தில் நேற்று மாலை குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இரகசிய தகவல்

பண்டாரவளை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பெண் கைது செய்ய்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, ரிவோல்வர் என்பவற்றுடன் முப்பது தோட்டாக்கள், துப்பாக்கித் தோட்டா உறை மற்றும் நான்கு வெற்று தோட்டாக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட பெண்ணை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version