கம்பஹா – மினுவாங்கொடையில் வீட்டில் இருந்த 71 வயது பெண் ஒருவர் கொலை
செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, இது ஒரு கொடூரமான மற்றும் மோசமான குற்றம் என்று
விபரிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவர் இறந்ததிலிருந்து தனியாக வசித்து வந்த
பாதிக்கப்பட்ட இந்த பெண், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு, பாலியல்
பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் அவரது முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசி கழுத்தை
நெரித்து கொலை செய்துள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய
மினுவாங்கொடை பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
