Home இலங்கை குற்றம் நீதிமன்ற வளாகத்திற்குள் பொம்மை துப்பாக்கியுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய பெண்

நீதிமன்ற வளாகத்திற்குள் பொம்மை துப்பாக்கியுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய பெண்

0

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு ஒன்றிற்காக பொம்மை துப்பாக்கியுடன் வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கூறிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு ஒன்றிற்காக நேற்று (27) மதியம் குறித்த பெண் வருகை தந்துள்ளார்.

இதன்போது நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேகநபரின் கைப்பைக்குள் இருந்து பொம்மை துப்பாக்கியை கைப்பற்றியுள்ளார்.

காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணை

சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றதற்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version