வலகப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகாமையில் தொடருந்து மோதி பெண் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த மேற்படி பெண், தொடருந்து பாதையைக் கடக்க முற்பட்ட
வேளையில் தொடருந்து மோதி மரணமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சிலாபம் – கொழும்பு வழியாகச் சென்ற தொடருந்து மோதியே இந்தப் பெண்
உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
