யாழ்ப்பாணம் (Jaffna) – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் பெண்ணொருவர்
உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஆரம்ப கட்ட விசாரணை
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று பயணித்த
தொடருந்துடன் கொடிகாமம் பகுதியில் மோதி உயிரிழந்துள்ளார்.
தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளையே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.
