யாழில் (Jaffna) சட்டவிரோதமாக கருக்கலைப்பு காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – சுன்னாகம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்புக்கு காரணம்
உயிரிழந்த பெண் அதீத இரத்த பெருக்கு ஏற்பட்ட தன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அதீத இரத்த பெருக்கே உயிரிழப்புக்கு காரணம் என மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருக்கின்றனர்.
https://www.youtube.com/embed/5rXHhEMuH4A
