Home இலங்கை சமூகம் நிலவும் சீரற்ற காலநிலை: பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலை: பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

0

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (National Building Research Organization) தெரிவித்துள்ளது.

இதன்படி பதுளை (Badulla), கண்டி (Kandy) , மாத்தறை (Matara), நுவரெலியா, காலி (Galle) , களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக மலையக பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் வீதிகளை பயன்படுத்தும் சாரதிகளும் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

பெண் பலி

இதேவேளை,
பண்டாரவளை (Bandarawela) பகுதியில் வீட்டின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த மரணமானது, இன்றையதினம் (26) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சீரற்ற காலநிலை

மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததாக பண்டாரவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மோசமான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மண்சரிவு, மரங்கள் மற்றும் பாறைகள் விழுவதால் இந்த வீதிகள் தடைப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

பதுளைக்கு செல்லும் தொடருந்துகள் பண்டாரவளையில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தொடருந்து திணைக்களம் (Department of Railways – Sri Lanka) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version