Home இலங்கை குற்றம் தன்னைத்தானே கடத்தி கணவனிடம் 50 இலட்சம் ரூபா கேட்ட பெண்: பொலிஸாரின் நடவடிக்கை

தன்னைத்தானே கடத்தி கணவனிடம் 50 இலட்சம் ரூபா கேட்ட பெண்: பொலிஸாரின் நடவடிக்கை

0

கர்ப்பிணி பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து கணவனிடம் 50 இலட்சம் ரூபா பணம் கேட்டு தொல்லை கொடுத்த சம்பவம் ஒன்று இரத்தினபுரி – கலவானை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

கடந்த 9ஆம் திகதி குறித்த கர்ப்பிணி பெண், மாதாந்த கிளினிக்குக்குச் செல்வதாக கூறிவிட்டு, வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அன்றைய தினம் தனது மனைவி, வீட்டுக்குத் திரும்பவில்லை என அவருடைய கணவன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸ் விசாரணை

இதற்கிடையில், அந்தப் பெண்ணை விடுவிக்க வேண்டுமாயின் 50 இலட்சம் ரூபா பணத்தைக்
கொடுக்க வேண்டும் என்று இனம் தெரியாத தொலைபேசி அழைப்பொன்று, கணவனின்
அலைபேசிக்கு வந்துள்ளதுடன் வட்ஸ்அப் இற்கும் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த பெண்ணின் கணவன் பொலிஸாருக்கு தெரியடுத்தியதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் குறித்த பெண்ணை கலவானை பொலிஸ் பிரிவிலுள்ள கோவிந்தபுரத்தில் கடந்த 12 ஆம் திகதி மாலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணைகள் மூலம், இணையத்தளத்தின் ஊடாக 5 மாதங்களுக்கு முன்னர் தொடர்பில் இருந்த கர்ப்பிணி பெண்ணும் இளைஞனும் பின்னர் காதலர்களாக மாறியுள்ளமை தெரிய வந்துள்ளது. 

விளக்கமறியல் 

இந்நிலையில், பெண்ணை,
சியம்பலாண்டுவ நகருக்கு வரவழைத்த காதலன், கலவான – வெத்தேகொட
பகுதியிலுள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, அங்கு வைத்து கணவனிடமிருந்து பணம் பெறுவதற்கான அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். 

இதற்கமைய, விசாரணைகளின் பிரகாரம் 31 வயதான பெண்ணையும், அவருடைய காதலன் என அறியப்பட்ட 21 வயதான இளைஞரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மேலும், அந்த இளைஞரை
சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய போது அவரை 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கர்ப்பிணி பெண், அவருடைய பெற்றோரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version