புதிய இணைப்பு
யாழ். கற்கோவளம் பகுதியில் உள்ள கம்பி வலையால் மூடப்பட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், நோயின் தாக்கத்தால் வலி தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், தனது மரணத்திற்கு தானே காரணம் என்று கடிதம் ஒன்றையும் அந்த பெண் எழுதி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம்(Jaffna) பருத்தித்துறை கற்கோவளம் – வராத்துப்பளை பகுதியில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ள நிலையில் அவரது குடும்பத்தார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
தீவிர விசாரணை
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கம்பி வலையால் மூடிய கிணற்றடி பகுதியில் தொலைபேசி சத்தம் கேட்டுள்ளதனையடுத்து காணாமல் போன பெண்ணின் மகன் அங்கு சென்று பார்த்த வேளை கிணற்றுக்குள் தனது தாயாரின் சடலம் இருப்பதை அவதானித்துள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயான விமலன் சிந்து என்கின்ற 42 வயதுடைய குடும்பப் பெண் ஆவார்.
இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.