புத்தளம் அருகே கடற்கரையில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
புத்தளம், நுரைச்சோலைப் பிரதேசத்தை அண்மித்த தளுவைக் கடற்கரைப் பகுதியில் இருந்தே இந்த உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உடற்பாகங்கள் மீட்பு
நேற்றையதினம்(3)சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் இந்த உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
