சுமார் எட்டு மாத காலத்துக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் நேற்றிரவு (28) கெஸ்பேவ பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு அருகே கெஸ்பேவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் , பிலியந்தலை மடபாத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்துக்குரியவர் குறைந்தது சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
அதே நேரம் உயிரிழந்தவர் ஒரு பெண்ணாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகளவாக காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (29) கெஸ்பேவ நீதவான் நீதிபதியின் நேரடி அவதானிப்பின் பின்னர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
