பதுளை- பல்லேகெட்டுவ பொலிஸ் தோட்டப் பகுதியில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது நேற்றையதினம்() மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்திருப்பது
கண்டறியப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் யார் என அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
உயிரிழந்தவரின் சடலம் பதுளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.
