Home இலங்கை குற்றம் கொழும்பில் விசேட அதிரடிப்படையினரால் பெண்ணொருவர் கைது

கொழும்பில் விசேட அதிரடிப்படையினரால் பெண்ணொருவர் கைது

0

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸர் விசாரணை

இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 44 வயதுடைய பெண் கையடக்கத் தொலைபேசியுடன் கைது செய்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கடவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version