Home இலங்கை குற்றம் நானுஓயா கோவிலில் திருடிய பெண்ணுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நானுஓயா கோவிலில் திருடிய பெண்ணுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் உள்ள கோவில் ஒன்றில் உண்டியலை உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைதான பெண்ணை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதிபதி
உத்தரவிட்டுள்ளார்.

கம்பளையைச் சேர்ந்த 48 வயது நிரம்பிய பெண்ணே இவ்வாறு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நானுஓயா நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்ரீ மருத வீரன் ஆலயத்தில் (16) ஆம் திகதி உண்டியலை உடைத்து1300 ரூபாய் கொள்ளையடித்த பெண், பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியல்

சாமி சிலைகள், விளக்குகள் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த
பணம் என்பவற்றை களவாடி இவர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார்.

மக்களால் பிடிக்கப்பட்ட அவர், நானுஒயா பொலிஸ் அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் (17) ஆம் திகதி
நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிபதி அந்தப் பெண்ணை எதிர்வரும்
27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணை

பொது மக்களிடம் மாட்டிக் கொண்ட பிறகு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல் நடிந்து
மயங்கி விழுவதுபோல இவர் நடித்துள்ளார் என தோட்ட பொது மக்கள் தெரிவித்தனர்.

மேலும், இது மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

NO COMMENTS

Exit mobile version