2024ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் இருபதுக்கு 20 ஆசியக் கிண்ணப் போட்டிகளை பொதுமக்களுக்கு இலவசமாகப் பார்வையிடும் வாய்ப்பை வழங்க இலங்கை(Sri lanka) கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, பொதுமக்கள் மைதானத்திற்குள் பிரவேசிப்பதற்கும் விளையாட்டுப் போட்டிகளைக் காணவும் ரங்கிரி தம்புள்ளையில் மைதானத்தின் வாயில்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியுடன் ஜூலை 19ஆம் திகதி இருபதுக்கு 20 ஆசியக் கிண்ணப் போட்டி ஆரம்பமாகின்றது.
ரி20 ஆசியக் கிண்ணத் தொடர்
மேலும் பங்களாதேஷிற்கு எதிரான இலங்கையின் முதல் போட்டி ஜூலை 20ஆம் திகதி நடைபெற உள்ளது.
மேலும், மகளிர் ரி20 ஆசிய கிண்ணத்தில் விளையாட சர்வதேச மகளிர் அணிகள் இலங்கைக்கு வர ஆரம்பித்துள்ளன.
அந்த வகையில் மலேசியா, நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம், தாய்லாந்து ஆகிய நாடுகள் ஏற்கனவே இலங்கை வந்தடைந்துள்ளன.
பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்திய அணிகள் நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.