கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள விடுதியில் நபர் ஒருவரை ஏமாற்றி 1,200,000 ரூபாவுக்கும் அதிகமான தங்கம் மற்றும் பணத்தை பெண்கள் இருவர் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் மற்றும் பேருந்து நடத்துனரை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குறித்த நபர் கொழும்பில் உள்ள பெண் ஒருவருடன் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளார். இந்த விடுதி மொரட்டுவ நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள இடமாகும்.
தங்க நகை திருட்டு
குறித்த நபர் குளியலறைக்குள் சென்றதையடுத்து குறித்த பெண் 40,000 ரூபாய் கையடக்கத் தொலைபேசி, தங்க சங்கிலி மற்றும் தங்க நெக்லஸ் என்பனவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் விடுதியில் இருந்து வெளியே வந்து பெண்ணை தேடிய போது அந்த நபர் மற்றொரு அழகான பெண்ணை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
குறித்த பெண்ணுடன் ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் அந்த பெண்ணுடன் மீண்டும் விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தூங்கிய பின்னர், இந்த பெண்ணும் அவரது கைச்செயினை திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி 112,000 ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 65 வயதான ஒருவரே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
இதனிடையே, திருடப்பட்ட தங்கப் பொருட்களை, பஸ் நடத்துனர் ஒருவரிடம் வைத்துக்கொள்ள கொடுத்ததுள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.