Home இலங்கை சமூகம் ஏற்படவிருந்த பாரிய தொடருந்து விபத்தை தவிர்த்த பெண் – பயணிகள் பாதுகாப்பாக நிறுத்தம்

ஏற்படவிருந்த பாரிய தொடருந்து விபத்தை தவிர்த்த பெண் – பயணிகள் பாதுகாப்பாக நிறுத்தம்

0

இலங்கையில் ஏற்படவிருந்த மற்றுமொரு பாரிய தொடருந்து விபத்து பெண் ஒருவரினால் தடுக்கப்பட்டுள்ளது.

கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான தொடருந்து பாதையில் இன்று காலை விபத்து ஏற்படவிருந்த நிலையில் அது தவிர்க்கப்பட்டுள்ளது.

கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் பாரிய தாழிறக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. காலை 5.30 மணியளவில் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் இதனை அவதானித்து உடனடியாக தொடருந்து நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

தொடருந்து நிலைய அதிகாரிகள்

உடனடியாக செயற்பட்ட தொடருந்து நிலைய அதிகாரிகள் அந்த நேரத்தில் குறித்த தண்டவாளத்தின் ஊடாக வந்த தொடருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றியுள்ளனர்.

இதன் காரணமாக கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி தொடருந்து ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில், தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பை நபர் ஒருவர் தெரியப்படுத்தும் வகையில் சிவப்பு சட்டையுடன் ஓடியிருந்தார்.

இதன் காரணமாக ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டதுடன், தொடருந்த நிலைய அதிகாரிகளால் அவர் பாராட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version