Home இலங்கை சமூகம் யாழில் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு

யாழில் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு

0

யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற
பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

பெண்கள் கௌரவிப்பு

இதன்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 15 பெண்கள்
கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், யாழ். பல்கலைக்கழக
சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன், யாழ்.மாநகர சபை முதல்வர் மதிவதனி
விவேகானந்தராசா, வெற்றி பெற்ற உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள், சமூக
செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version