Home விளையாட்டு ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

0

ஆசிய கிண்ண (Asia Cup) ரி20 மகளிர் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில், இந்திய (India) மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி,  இன்றைய (21) போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அந்தவகையில், ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய  இந்திய அணி சார்பில் தொடக்க வீராங்கணையான ஷபாலி வர்மா (Shafali Verma) 37 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

அரை சதம்

அதற்கு பிறகு துடுப்பெடுத்தாடிய ரிச்சா கோஷ் (Risha Ghosh)  64 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தநிலையில், அரை சதம் கடந்த ஹர்மன்பிரித் கவுர் (Harmanpreet Kaur)  66 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 201 ஒட்டங்களை குவித்தது.

வெற்றி இலக்கு

இதையடுத்து, 202 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி சார்பில், ஈஷா ரோகித் (Esha Rohit Oza) 38 ஒட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதனையடுத்து வந்தவர்களால் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க முடியவில்லை எனினும் கவிஷ்கா எகோடகே (
Kavisha Egodage) பொறுப்புடன் ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அபார வெற்றி

எனினும், இந்திய அணியினரின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பினால்  ஐக்கிய அரபு அமீரக அணி சிரமப்பட்டது.

அந்தவகையில், இந்திய அணி சார்பில் 
பூஜா வஸ்த்ரகர் (Pooja Vastrakar) நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இறுதியில், ஐக்கிய அரபு அமீரக அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அபார வெற்றி பெற்றுள்ளது.

NO COMMENTS

Exit mobile version