Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் கட்டிட வேலையில் ஈடுபட்ட தொழிலாளி சடலமாக மீட்பு..!

கிளிநொச்சியில் கட்டிட வேலையில் ஈடுபட்ட தொழிலாளி சடலமாக மீட்பு..!

0

கிளிநொச்சி (Kilinochchi) இரத்தினபுரம் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்
ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேல் மாடி கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் நேற்று (22.08.2024) இரவு இருவர் வெல்டிங் வேலை
செய்து கொண்டிருந்த நிலையில் ஒருவர் நித்திரைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், மற்றவர் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் அதிகாலை எழுந்து மற்றவரை காணாது
தேடியபோது சடலமாக கீழே காணப்பட்டார் என பொலிஸாருக்கு தெரிவித்திருந்தார்.

பொலிஸார் விசாரணை

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையைச்சேர்ந்த 34 வயதுடைய
சின்னான்டி பரமேஸ்வரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/worker-construction-kilinochchi-recover-dead-body-1724398216

NO COMMENTS

Exit mobile version