Home இலங்கை சமூகம் உலகில் அதிக வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகில் அதிக வயதானவர் 116 வயதில் காலமானார்

0

கடந்த ஆண்டு செப்டம்பரில் உலகின் வயதானவராக, கின்னஸ் உலக சாதனைகளால் அங்கீகரிக்கப்பட்ட டோமிகோ இடூகா(Tomiko Itooka),  காலமானார்

அவர் தமது 116 வது வயதில் காலமானதாக ஜப்பானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகின் வயதானவர்

ஜப்பானின் – ஹியோகோ மாகாணத்தின் ஆசியா நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்று இரவு 9:03 மணிக்கு டோமிகோ இடூகா முதுமை காரணமாக காலமானதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஸ்பெயினின் மரியா பிரான்யாஸ் மொரேரா என்பவர் 2024 ஆகஸ்ட்டில் தமது 117 வயதில் காலமான பின்னர், டோமிகோ இடூகாவே உலகின் வயதானவராக கருதப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version