Home இலங்கை சமூகம் கோழி இறைச்சியில் புழுக்கள்! கொழும்பு உணவு விடுதியொன்றின் மோசமான செயல்

கோழி இறைச்சியில் புழுக்கள்! கொழும்பு உணவு விடுதியொன்றின் மோசமான செயல்

0

கொழும்பு புறநகர்ப் பகுதியான மாலபேவில் உள்ள ஒரு அசுத்தமான உணவு விடுதி தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான காணொளியை பதிவு செய்யும் நபர், உணவு விடுதியில் விற்கப்படும் கோழி இறைச்சித் துண்டில் புழுக்கள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளார்.

தொடர்ந்தும் காணொளியை பதிவு செய்யும் அவர், இது தொடர்பாக கடையில் இருப்பவர்களிடம் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வெளியேறிய வாடிக்கையாளர்

இதனையடுத்து, குறித்த கடையில் இருந்த பெண், இது தற்போது சமைக்கப்பட்ட இறைச்சி எனவும் அதில் புழு இருப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார்.

அதன் பின்னர், காணொளியை பதிவு செய்த நபர் தனக்கு உணவு வேண்டாம் என கூறி விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version