Home உலகம் விதியை மீறிய ஈரானிய உச்ச தலைவர்: முகங்கொடுக்க நேர்ந்த புதிய சிக்கல்

விதியை மீறிய ஈரானிய உச்ச தலைவர்: முகங்கொடுக்க நேர்ந்த புதிய சிக்கல்

0

எக்ஸ் (X) சமூக ஊடக வலையமைப்பில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ali Khamenei) புதிய ஹிப்ரு மொழி கணக்கு உருவாக்கப்பட்ட அடுத்த நாளிலேயெ இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எக்ஸ் சமூக ஊடக வலைத்தளத்தின் விதிகளை மீறியதற்காக அவரின் கணக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானிய ஆன்மீகத் தலைவர் இஸ்ரேலை (Israel) விமர்சித்து பதிவுகளை’ வெளியிட்டதை தொடர்ந்து எக்ஸ் சமூக ஊடக வலையமைப்பு ஈரானிய உச்ச தலைவரின் கணக்கை இடைநிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

எச்சரிக்கை

குறித்த பதிவில், “சியோனிச ஆட்சி ஒரு தவறு செய்து விட்டது” என்று அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கையொன்றை விடுத்த நிலையில் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனினும், கணக்கு இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், எக்ஸ் சமூக ஊடக வலையமைப்பின் சார்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு ஏதும் விடுக்கப்படவில்லை.

சமூக ஊடக இடைநீக்கங்கள்

அயதுல்லா அலி கமேனி சமூக ஊடகங்களில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதையோ அல்லது அகற்றப்படுவதையோ இது முதல் முறை அல்ல.

பெப்ரவரி 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸ் ஆதரவு அளித்ததற்காக உச்ச தலைவரின் முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை மெட்டா நீக்கியது.

எக்ஸ் மற்றும் முகப்புத்தகம் போன்ற சமூக ஊடக தளங்கள் ஈரானில் பல ஆண்டுகளாகத் தடுக்கப்பட்டுள்ளன, ஈரானியர்கள் அவற்றை அணுக மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

NO COMMENTS

Exit mobile version