Home இலங்கை சமூகம் முன்னறிவிப்பின்றி திடீரென மூடப்பட்ட யால தேசிய பூங்கா

முன்னறிவிப்பின்றி திடீரென மூடப்பட்ட யால தேசிய பூங்கா

0

தற்போதைய மழை நிலைமைகள் தணியும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையால் யால தேசிய பூங்காவின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றும், பூங்காவிற்குள் உள்ள சில ஏரிகளின் கரைகள் உடைந்து சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யால தேசிய பூங்கா

இதன் காரணமாக, வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்று (மார்ச் 1) முதல் மழை நிலைமைகள் தணியும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யால வலய இலக்கம் 01 -ஐ சேர்ந்த கடகமுவ மற்றும் பலடுபான நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் யால சஃபாரி ஜீப் வாகன சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தால், முன்பணம் செலுத்திய சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version