யே மாய சேசாவே
சமந்தா – நாகா சைதன்யா இருவரும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுடைய பிரிவு பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு தந்தது.
இவர்கள் இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். ஆனால், முதன் முதலில் ஜோடியாக சேர்ந்த நடித்த படம்தான் ‘யே மாய சேசாவே’. இயக்குநர் கவுதம் மேனன் இப்படத்தை இயக்கியிருந்தார்.
ப்ரீ புக்கிங்கில் இதுவரை குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
தமிழில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கி ரீமேக்தான் யே மாய சேசாவே. 2010ம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ரீ ரிலீஸ்
இந்த நிலையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து இப்படத்தை தற்போது ரீ ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
தெலுங்கில் வெளிவந்த காதல் க்ளாஸிக் திரைப்படங்களில் ஒன்றான யே மாய சேசாவே படத்தை, வருகிற ஜூலை 18ம் தேதி ரீ ரிலீஸ் செய்யபோகிறார்களாம். இப்படத்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
