Home இலங்கை சமூகம் யாழில் சோகம் – கால்பந்து விளையாடிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

யாழில் சோகம் – கால்பந்து விளையாடிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

0

யாழ். (Jaffna) நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில்
ஈடுபட்ட இளைஞன் கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த துயர சம்பவம் நேற்றைய தினம் (20.07.2025) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில் , நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை
மைதானத்தில் உதைப்பந்தாட்டம் விளையாடிய இளைஞர் மீது கோல் கம்பம் வீழ்ந்துள்ளது.

காவல்துறையினர் விசாரணை

அதில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிசை பலனின்றி யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை (வயது 29) என்ற
இளைஞர் உயிரிழந்துள்ளார்

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர்

விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version