Home இலங்கை சமூகம் யாழில் தவறான முடிவெடுத்து யுவதி உயிர்மாய்ப்பு

யாழில் தவறான முடிவெடுத்து யுவதி உயிர்மாய்ப்பு

0

யாழ்ப்பாணம்- வரணி பகுதியில் யுவதி ஒருவர்  தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவமானது இன்று (18) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த யுவதியின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

பிரேத பரிசோதனை

இந்தநிலையில், யுவதியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் (வயது 23) என்பவரே உயிரிழந்தார்.

நண்பர்களுடன் சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய போது குறித்த இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்டு, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version