Home இலங்கை சமூகம் தவறிய தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட உறவு – இளைஞன் எடுத்த விபரீத முடிவு

தவறிய தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட உறவு – இளைஞன் எடுத்த விபரீத முடிவு

0

களுத்துறை, ஹொரணையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முனகம பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 24 வயதான அசேல திலினக என்ற இளைஞன் நேற்று காலை உயிரை மாய்த்துள்ளார்.

உயிரிழந்த இளைஞர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், சுமார் 7 மாதங்களுக்கு முன்பு தவறிய தொலைபேசி அழைப்பு மூலம் அறிமுகமான வேறொரு பெண்ணுடன் வசித்து வந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடும்பத் தகராறு 

23 வயதான அந்தப் பெண்ணும் ஏற்கனவே திருமணமானவர் என்பதுடன், இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக தற்காலிக முகவரியில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த இளைஞன் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version