Home இலங்கை குற்றம் புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தர் கைது

புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தர் கைது

0

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் தேக்கங்காடு பகுதியில் ஜஸ் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த இளம் குடும்பஸ்தர்
ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (05.10.2024) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 38 வயதுடைய அதே பகுதியை சேர்ந்தவராவர். 

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரிடம் இருந்து 3 கிராம் 10 மில்லிகிராம் ஐஸ்
போதைப்பொருளும், 430 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/young-family-man-arrested-drugs-puthukkudiyiruppu-1728212376

NO COMMENTS

Exit mobile version