அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ்(Kamala Harris) வேட்பாளராக நிறுத்தப்பட்டால் “நான் எளிதில் வெற்றி பெற்று விடுவேன்” என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் களம் இறங்க முடிவு செய்து இருந்த ஜோ பைடன் (Joe Biden)போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனால், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் அல்லது ஹிலாரி கிளிண்டன் போட்டியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
டொனால்ட் ட்ரம்ப்
ஜோ பைடன் வெளியிட்ட மற்றொரு எக்ஸ் பதிவில், கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக ஆதரிப்பதாக பதிவிட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டி அளித்த டொனால்ட் ட்ரம்ப், “கமலா ஹாரிஸ் என்றால் எளிதில் வீழ்த்திவிடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.