Home உலகம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாகவும் இரத்து செய்யப்படும் ஹாட் ஏர் பலூன் திருவிழா

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாகவும் இரத்து செய்யப்படும் ஹாட் ஏர் பலூன் திருவிழா

0

 பிரித்தானியாவின் (United Kingdom) லண்டனில் (London) திட்டமிடப்பட்டிருந்த ஹாட் ஏர் பலூன் திருவிழா சீரற்ற வானிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

The Lord Mayor’s Hot Air Balloon Regatta என அழைக்கப்படும் இந்த நிகழ்வு இந்த முறையுடன் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாகவும் கைவிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு 2019 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை என்பதுடன் கோவிட் தோற்று காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் சாத்தியப்படாத நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகள் மோசமான வானிலை காரணமாக ஹாட் ஏர் பலூன் திருவிழா நடத்தப்படவில்லை.

சீரற்ற வானிலை

ஐந்து ஆண்டுகளை தொடர்ந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வு இந்த ஆண்டில் மாத்திரம் இரத்து செய்யப்படுவது இதனுடன் இரண்டாவது முறையாகும்.

இந்த வருடம், ஜுலை மாதம் 07 ஆம் திகதி குறித்த நிகழ்வு திட்டமிடப்பட்டு, பின்னர்  21 ஆம் திகதி மாற்றியமைக்கப்பட்டது.

எனினும், சீரற்ற வானிலையினால் மீண்டும் தடைப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நிகழ்வு நடாத்துவதற்கு நம்பிக்கை இருப்பதாக அறிவித்துள்ள அமைப்பாளர்கள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு  ( 28) பலூன் திருவிழாவை மாற்றியமைத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version