யாழ்ப்பாணத்தில் (Jaffna) இளம் குடும்பப் பெண் ஒருவர் கணவனின் கண் முன்னே தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கூழாவடி மேற்கு ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கதீஸ்வரன் நிலாஜினி லகிதா என்ற மூன்று பெண் பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குறித்த பெண்ணின் கணவர் சுவிஸில் (Switzerland) வசித்து வருகின்ற நிலையில் அவருடன் கடந்த 24 ஆம் திகதி காணொளி அழைப்பில் கதைத்துக்கொண்டு இருந்த வேளை இருவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
திடீர் மரண விசாரணை
இதையடுத்து, அந்த பெண் கணவனின் கண்முன்னே தவறான முடிவெடுத்த நிலையில் கணவன், அயல் வீட்டவருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதையடுத்து அயல் வீட்டார்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்தநிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் (Jayapalasingam) மேற்கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/young-girl-suicide-in-jaffna-1719867728?itm_source=parsely-popular
