Home இலங்கை சமூகம் சாதனை படைத்த தமிழன் – பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிள் பயணம்

சாதனை படைத்த தமிழன் – பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிள் பயணம்

0

யாழ்ப்பாணம் (Jaffna) எங்கே இருக்கின்றது என்பதை உலகத்திற்கே காட்டுவதற்காகவே இந்த சைக்கிள் பயணத்தை முன்னெடுத்ததாக பிரான்ஸில் (France) இருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிளில் இனோசூரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இனோசூரன் என்பவர் உள்நாட்டு போர் காரணமாக பிரான்ஸ் நாட்டில் குடியேறியுள்ளார்.     

தற்போது பிரான்சில் வசிக்கும் இனோசூரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை ” பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற அவரது சிறப்பு சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

சமூக மற்றும் கலாசார உறவு

செப்டம்பர் முதலாம் திகதி பிரான்சிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய சுரன், கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஜெர்மனி, துருக்கி, இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் வழியாகப் பயணம் செய்து அக்டோபர் 23 அன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

அவரது முயற்சியினை பாராட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன்  இலங்கை இராணுவத்தினரால் அவர் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தின் சிறப்பு மரபுகளை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவது.

மற்றும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தை ஒரு அழகான இடமாக ஊக்குவிப்பதும், நல்லிணக்கத்தை வளர்ப்பதும், சர்வதேச சமூகங்களுடனான சமூக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதும் தனது நோக்கம் என  இனோசூரன் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version