Home இலங்கை சமூகம் யாழில் கடன் சுமையால் உயிர் மாய்த்த இளைஞன்

யாழில் கடன் சுமையால் உயிர் மாய்த்த இளைஞன்

0

யாழில் (Jaffna) இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (18.11.2025) பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஆ.கஜிந்தன் (வயது 28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள தந்தையின் வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து
வருகிறார். 

நேற்றுக் காலை அந்த வர்த்தகஸ்தாபனத்தின் களஞ்சியசாலையில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

கடன்சுமை காரணமாக குறித்த இளைஞன் உயிர்மாய்த்ததாக மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version