Home இலங்கை சமூகம் பூநகரியில் இளைஞன் உயிரிழந்த விவகாரம் : போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்

பூநகரியில் இளைஞன் உயிரிழந்த விவகாரம் : போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்

0

கடந்த 31ஆம் திகதி பூநகரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தம்பிராய் குளத்திற்கு
அண்மையில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த. பூநகரி
செம்மன் குன்று பகுதியைச் சேர்ந்த கந்தசாமி பிரணவனின் இறுதிக்கிரியை நேற்று(03) நடைபெற்ற நிலையில் கொலைக்கு நீதி வேண்டி பிரதேச மக்களினால் இறுதி
ஊர்வலத்தின் போது கவனயீர்ப்பு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வலியுறுத்தி
பூநகரி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் பொது மக்களின் கையொப்பம்
அடங்கிய மனுவை கையளித்துள்ளனர்.

பொலிஸாரினால் கைது

வாள் வெட்டுக்குழுக்களை சட்டத்தின் முன்
நிறுத்துங்கள், உயிரை பறித்தவரை ஒரு போதும் மண்ணிக்காதே, போதையை கூண்டோடு
ஒழிப்போம் போன்ற பதாகைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்துடன்
தொடர்புடைய சந்தேக நபர்கள் நான்கு பேர் பூநகரி பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version