Home முக்கியச் செய்திகள் பூநகரியில் இன்றுமாலை வாள்வெட்டு :சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்

பூநகரியில் இன்றுமாலை வாள்வெட்டு :சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்

0

கிளிநொச்சி பூநகரி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பூநகரி தம்பிராய் பகுதியில் இன்று
மாலை (31)ஆறு முப்பது மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பூநகரி
செம்பங்குன்று பகுதியைச் சேர்ந்த கந்தசாமி பிரணவன் (வயது 28 )என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சடலம்

இனம் தெரியாதவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  இறந்த இளைஞனின் சடலம் பிரேத
பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு
பிரேதபரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பூநகரி காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன்
இச்சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை பூநகரி காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.

 

NO COMMENTS

Exit mobile version