Home இலங்கை சமூகம் காட்டு யானை தாக்கியதில் இளைஞன் பரிதாப மரணம்

காட்டு யானை தாக்கியதில் இளைஞன் பரிதாப மரணம்

0

மகியங்கனையில் (Mahiyanganaya) காட்டு யானை தாக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகியங்கனை, பெலிகல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞன், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது இடைநடுவில் உயிரிழந்துள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.

இந்சிலையில்,  உயிரிழந்த இளைஞனின் சடலம் மகியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/young-man-died-attacked-by-a-wild-elephant-1720436826

NO COMMENTS

Exit mobile version