Home இலங்கை சமூகம் திருகோணமலையில் மறைந்திருந்து தாக்கிய யானை: இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்

திருகோணமலையில் மறைந்திருந்து தாக்கிய யானை: இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்

0

திருகோணமலையில் (Trincomalee) யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கிண்ணியா- இடிமனை சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தரான அப்துல் சத்தார் முகம்மது அயாஸ் என்பவரே உயிரிழந்வராவார்.

உயிரிழப்பு

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த குடும்பஸ்தர் தனது தந்தையுடைய பண்ணைக்கு சென்றவேளை அங்கு மறைந்திருந்த யானை குடும்பஸ்தரை தாக்கிய நிலையில் குடும்பஸ்தர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், உயிரிழந்தவரின்  சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் இரண்டு வாரத்துக்குள் யானையின் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/young-man-dies-attacked-by-an-elephant-in-kinniya-1718441069

NO COMMENTS

Exit mobile version