Home அமெரிக்கா ஈரான் விடயத்தில் அமெரிக்க புலனாய்வு இயக்குநரின் தவறு..! ட்ரம்ப் கூறிய விடயம்

ஈரான் விடயத்தில் அமெரிக்க புலனாய்வு இயக்குநரின் தவறு..! ட்ரம்ப் கூறிய விடயம்

0

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், ஈரான் மற்றும் அணு ஆயுதம் தொடர்பில் தவறான கருத்தை கூறியதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(20.06.2025) செய்தியாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குகின்றது என்பதற்கு தங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை முன்னர் கூறியிருந்தது. 

உடனே பதிலளித்த ட்ரம்ப்

தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் தான் இவ்வாறு குறிப்பிட்டதாக ட்ரம்பிடம் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அவர் தவறாக கூறியிருப்பதாக ட்ரம்ப் உடனே பதிலளித்தார்.

NO COMMENTS

Exit mobile version