Home இலங்கை சமூகம் யாழில் காய்ச்சலால் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் காய்ச்சலால் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

0

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பகுதியில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (7) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் லக்சன் (வயது 21) என்பவரே
உயிரிழந்துள்ளார்.

மேலதிக பரிசோதனை

மேற்படி இளைஞர் கொழும்பில் உயர் படிப்பை கற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில்
உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.

நான்கு நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிந்த நிலையில் நேற்று புதன்கிழமை
உடல்நிலை மிக மோசமான நிலையில் குடும்பத்தினர் அவரை பருத்தித்துறை ஆதார
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், அவரின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version